ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் அக்னிசட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் முளைப்பாரியினை மேள தாளங்கள் முழங்க வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து கோயிலில் அம்மனை மனமுருக வழிபட்டனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.