பீகார் மாநிலம் பாட்னாவில் இளநிலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மருத்துவ மாணவர்கள் இருவர் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதான மருத்துவ மாணவர்களின் பெயர் குமார் மங்கலம் பிஷ்னோய் மற்றும் தீபேந்திர குமார் என்பது தெரியவந்துள்ளது.
நீட் தேர்வு நடைபெற்ற சமயத்தில் அவர்கள் ஹசாரிபாக்கில் இருந்தது தொழில்நுட்ப ஆய்வின் மூலம் தெரியவந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான மற்றொரு நபரின் பெயர் விவரம் சஷிகுமார் பாஸ்வான் என்பதும், நீட் முறைகேட்டுக்கு அவர் துணைபோனதும் தெரியவந்ததாக சிபிஐ அதிகாரிகள் கூறினர்.
















