மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள Deadpool & Wolverine திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஷான் லெவி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும், ரையான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர்.
கடந்த 2016-ல் வெளியான Deadpool திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது Deadpool & Wolverine திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது.