கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியை இன்டர் மியாமி கிளப் கௌரவித்துள்ளது.
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் கொலம்பியா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி கோப்பை கைப்பற்றியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
அவரை கௌரவிக்கும் விதமாக ஆண்டு வாரியாக 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி இன்டர் மியாமி வீரர்கள் கௌரவித்தனர்.