கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் ஏற்பட்ட செயற்கை அருவியில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
பவானி ஆற்றில் உள்ள சாமண்ணா நீரேற்ற நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனைக் கண்ட அப்பகுதி குழந்தைகள், பெண்கள் என அனைவரும் தண்ணீரில் விளையாடினர். இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.