மும்பையில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன.
இதேபோல நவிமும்பையிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை, ராய்காட், தானே, ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.