கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதும் சுகாதாரத் துறை துரிதமான நடவடிக்கை எடுத்ததை நினைவுகூர்ந்தார்.
அந்த வகையில், தற்போதும் அதிகாரிகள் துரிதகதியில் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவார்கள் என ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் நம்பிக்கை தெரிவித்தார். கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.