கன்வர் யாத்திரையையொட்டி, உத்தர பிரதேசத்தில் பக்தர்கள் செல்லும் பாதையில் நிகழ் சாவன் மாதம் முழுவதும் இறைச்சிக் கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்வர் யாத்திரையையொட்டி பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ஹரித்வாருக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள், கங்கை நதியிலிருந்து புனித நீர் எடுத்துவருவது வழக்கம்.
நிகழாண்டு கன்வர் யாத்திரை நாளை தொடங்கி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், பக்தர்கள் காவடியை தூக்கிச் செல்லும் வழித்தடத்தில் இறைச்சிக் கடைகளை மூட உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, இந்துக்கள் அல்லாதோர் உணவகம் வைத்திருக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், உணவக உரிமையாளர் தனது பெயர் பலகையை கடையின் முகப்பில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.