ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே உள்ள குடிநீர் மேல் நிலை தொட்டி நீரேற்று நிலையத்தில் பயன்பாடற்று கிடந்த சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டது.
அப்போது சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.