வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டமானது வன்முறையானதால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஊரடங்கு பிறப்பித்தது. தற்போது ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது