நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நிகழ் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது.
இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.