அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடன் களத்தில் இருந்தாா்.
குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறாா். 81 வயதான அதிபர் பைடன், ட்ரம்ப் உடனான முதல் நேரடி விவாதத்தின் போது தடுமாறியது, சொந்த கட்சியினரையே அதிருப்தி அடைய செய்தது. இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடன், அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபராக தான் பணியாற்றியது, வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து தான் விலகியுள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். தனது முடிவு தொடா்பாக நாட்டு மக்களிடையே விரைவில் விரிவாக உரையாற்றவுள்ளதாகவும், ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.