தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள திருவாலீஸ்வரர் கோயில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கட்டமாக பாலாலயம் பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து எந்த பணிகளும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே குடமுழுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்னர்.