மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒளிபரப்பு தளத்தை பார்வையிட்ட பின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசியவர்,
உண்மையை வெளிக்கொண்டு வரும் அளப்பறிய பணியை மேற்கொண்டுள்ள தமிழ் ஜனம்
தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.
இன்றைய கால கட்டத்தில் மனித மனங்களை இணைப்பதில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது.
ஊடகங்கள் ஆயுதங்களைப் போன்றவை. ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதனை பயன்படுத்துபவரின் கையில் உள்ளது. மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க ஊடகங்கள் பங்காற்ற வேண்டியது அவசியம்.
ஒற்றுமையை பறைசாற்றுவதோடு, உண்மையை சொல்ல வேண்டும். அதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் ஜனம் தொலைக்காட்சி இத்தகைய நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றன. தமிழ் ஜனம் தொலைகாட்சியின் முன்னெடுப்புகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனது பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.