சென்னை, திருவொற்றியூரில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த கூலி தொழிலாளி மயக்கமடைந்து உயிரிழந்தார்.
இப்பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 3 பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ரகு என்ற பணியாளர் நீண்ட நேரம் சுத்தம் செய்ததாகவும் இதனால் மயக்கமடைந்து அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.