திருச்சி மாவட்டம், முருங்கபேட்டை பகுதியில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கம்பரசம்பேட்டை – முருங்கபேட்டை சாலையில் அரசுப்பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர் உடலை மீட்ட காவல்துறையினர் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.