திருச்சியில் மகனை கொலை செய்துவிட்டு கொள்ளிடம் ஆற்று பாலத்தில் விட்டுசென்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
பீமநகரை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் மது அருந்தி விட்டு தாய் மற்றும் தம்பியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் மதுபோதையில் இருந்த தமிமுன் அன்சாரியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொள்ளிடம் ஆற்றில் அன்சாரியின் உடலை போட்டுவிட்டு சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.