பழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, தெரு நாய்கள் கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹேமா, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவர், கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து ஹேமாவை கடித்து குதறியது.
இதில், அலறி துடித்த மாணவியை எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களிடம் இருந்து மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.