“உங்கள் தொப்பியின் மீது பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சிங்கம் சின்னத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என போலீஸ் அதிகாரிகளை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர சட்ட மன்ற கூட்டம் அம்மாநில ஆளுநர் உரையுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சி எம்எல்ஏக்கள் கருப்பு துண்டு அணிந்தும், பாதாகைகளை ஏந்தியும் சட்டப் பேரவை உள்ளே செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சர்ச்சை வெடித்தது.