மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் இளைஞரின் வயிற்றில் இருந்த ஒரு அடி நீள சுரைக்காயை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.
கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே எக்ஸ்ரே மூலம் சுரைக்காய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுரைக்காய் வயிற்றில் இருந்ததால் வாலிபரின் பெருங்குடல் கிழிந்ததையடுத்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.