துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Sep 22, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு அவசர கதியில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், வழக்கு விசாரணையின்போது பதிலளிக்கக் கூட அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தனர்.

அதே சமயம், இந்த சட்டத்துக்கு தடை கோரிய பிரதான மனு மீது உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதற்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

வழக்கின் விசாரணையை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, வழக்கு விசாரணை முடியும் வரை இது சார்ந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்த எதிர் மனுதாரர், துணைவேந்தர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், அதுவரை துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

Tags: supreme courthigh courttamil Nadu Legislative AssemblyChief Minister to appoint Vice-Chancellors.appoint Vice-Chancellors
Share
Tweet
SendShare
Previous Post

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies