“நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல், இந்து விரோத திமுக அரசு மற்றும் இந்து விரோத அதிகாரிகள் கோவில்களை டார்கெட் செய்து இடித்து வருகிறார்கள்” என பாஜகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ராயப்பேட்டை துர்க்கை அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது இயந்திரங்களையும், வாகனங்களையும் கொண்டு வந்து அதிகாரிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்கள் எனக் கூறினார்.
“காவல்துறை, அரசாங்கம், மெட்ரோ இணைந்து இந்து விரோத ஆட்சியை நடத்துகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.