மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில், எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில், பாதுகாப்புத்துறைக்கு என 4 லட்சத்து 54 ஆயிரத்து 773 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஊரக வளர்ச்சித்துறைக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 808 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறைக்கு என 51 ஆயிரத்து 851 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், உள்துறைக்கு ஒரு 50 லட்சத்து 983 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு என ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 638 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பம் துறைக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு என 89 ஆயிரத்து 287 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றல் துறைக்கு 68 ஆயிரத்து 769 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலத்துறைக்கு 56 ஆயிரத்து 501 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் துறைக்கு என 47 ஆயிரத்து 559 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.