சந்திபுரா வைரஸில் இருந்து தற்காப்பது எப்படி?
Oct 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திபுரா வைரஸில் இருந்து தற்காப்பது எப்படி?

Web Desk by Web Desk
Jul 24, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவெடுத்து குழந்தைகளை குறி வைத்து தாக்கும் சந்திபுரா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ராப்டோவிரிடே என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சந்திபுரா வைரஸ், என்செஃபலிடிஸ் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்செஃபலிடிஸ் என்பது மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறிக்கும். இதனால், பக்கவாதம், கோமா, சில நேரங்களில் உயிரிழப்புக்கூட ஏற்படலாம். மேலும், அதிகமான காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வலிப்பு, விரைவாக கோமாவுக்கு இட்டுச் செல்வது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

இந்த வைரஸ், கடந்த 1960ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திப்புரா பகுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தான் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்புரா வைரஸ் தற்போது மீண்டும் உருவெடுத்து குஜராத்தில் சாபர்கந்தா மாவட்டத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வருகிறது. இந்த நோய் பரவும் வேகமும், அதன் தீவிரத்தன்மையும், அதிகமான இறப்பு சதவீதத்தை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குஜராத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சந்திப்புரா வைரஸ் பரவி, அண்மையில் 15 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது 6 வயது ஆண் குழந்தை , 4 வயது பெண் குழந்தை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவிக்கிறது. சந்திப்புரா வைரஸ் தமிழ்நாட்டில் பரவ வாய்ப்புகளே இல்லை என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வ விநாயகம்.

குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களே இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மணல் பூச்சிகளால் உருவாகும் சந்திபுரா வைரஸ் மனிதர்களிடமிருந்து நேரடியாக மனிதருக்கு பரவாது என்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார்.

டெங்கு, கொரோனா போன்றே சந்திப்புரா வைரஸை நேரடியாகத் அழிப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், உடம்பில் ஏற்படும் அறிகுறிகளைத் தணிக்க மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சந்திப்புரா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சந்திப்புரா நோய் பரவலைத் தடுக்க முழு கை கால் சட்டை அணிய வேண்டும், கொசு விரட்டிகள், கொசு வலைகள் பயன்படுத்த வேண்டும், வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும், வீட்டைச் சுற்றி தேவையற்ற செடிகளை அகற்ற வேண்டும், சுவர்களில் இருக்கும் விரிசல்கள், ஓட்டைகளை அடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: How to protect against Chandipura virus?
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு பலன்கள் என்ன? அம்பலமான உண்மை!

Next Post

இருமல் மருந்துகளில் நச்சுப் பொருட்கள்? – ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

Related News

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies