இருமல் மருந்துகளில் நச்சுப் பொருட்கள்? - ஆய்வில் அதிர்ச்சி முடிவு!
Jul 7, 2025, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருமல் மருந்துகளில் நச்சுப் பொருட்கள்? – ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

Web Desk by Web Desk
Jul 25, 2024, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளவில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான, இந்தியாவில் உள்ள 100 இருமல் மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்து தரமற்றது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய இருமல் மருந்துகளால், காம்பியா, உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மருந்து தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகளைக் கடுமையாக்கியது.

இந்தியாவின் மருந்துத் துறை, 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக உள்ளது. சர்வதேச அளவில் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

குறிப்பாக உலகத்துக்குத் தேவைப்படும் தடுப்பூசி தேவையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்தியா தான் உலகத்துக்கு வழங்கி வருகிறது.

மேலும்,ஜெனரிக் மருந்து எனப்படும் பொதுவான மருந்துகளின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் 40 சதவீத ஜெனரிக் மருந்து தேவையை இந்தியாவே அனுப்புகிறது. இங்கிலாந்தில் உள்ள அனைத்து மருந்துகளிலும் 25 சதவீதம் மருந்துகளை இந்தியாவே ஏற்றுமதி செய்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகளின் தரத்தை மேம்படுத்த புதிய உற்பத்தித் தரங்களை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு அதிக அக்கறை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் மருந்து ஏற்றுமதிக்கான ஒப்புதல் செயல்முறையை படிப்படியாக புதுப்பித்து வருகிறது.

மேலும்,புதிதாக கொண்டு வரப்பட்ட மருந்தின் உற்பத்தித் தரங்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு, மருந்து நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

தயாரிக்கப் படும் மருந்துகளின் தரத்திற்கு மருந்து உற்பத்தியாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் , எந்த பயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்டதோ, அந்த பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் , பயன்படுத்தும் நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

முறையான பரிசோதனைகளால், திருப்திகரமான முடிவுகளைப் பெற்ற பின்னரே ,மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளைச் சந்தைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஒரு தொகுப்பில் தயாரிக்கப்பட்ட மருந்துகளின் போதுமான அளவு மருந்து மாதிரிகளை உற்பத்தியாளர் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டுதல்கள் தந்திருந்தன.

பொருட்களைச் சோதிப்பதன் மூலம் “திருப்திகரமான முடிவுகளை” பெற்ற பின்னரே நிறுவனங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்த வேண்டும். ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் சோதனை அல்லது சரிபார்ப்பை செயல்படுத்த இடைநிலை மற்றும் இறுதி தயாரிப்புகளிலிருந்து போதுமான அளவு மாதிரிகளை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு,காம்பியா, உஸ்பெக்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்திய இருமல் மருந்துகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகள் எடுத்துக்கொண்ட இந்திய இருமல் மருந்துகளில் diethylene glycol (DEGடைஎதிலீன் கிளைகால்) [DEG], ethylene glycol (EG எத்திலீன் கிளைகால் EG] இருந்ததாக தெரிய வந்தது . இதனாலேயே குழந்தைகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டன என்றும் கண்டறிய பட்டது .

இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அரசு நடத்தும் NABL-அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஏற்றுமதி செய்வதற்கான இருமல் மருந்துகளைப் பகுப்பாய்வு செய்து, அந்த பரிசோதனை அறிக்கைகளை உடனடியாக வழங்குமாறு மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் முதல், இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்து பகுப்பாய்வு சான்றிதழை (CoA) பெறுவதை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) கட்டாயமாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் 40க்கும் மேற்பட்ட இருமல் தயாரிப்பு நிறுவனங்களின் இருமல் மருந்துகள் தரமற்றது என்று தெரியவந்துளளது.

மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பரிசோதனை செய்யப்பட்ட 7,087 தொகுதிகளில், 353 தொகுதிகளில்தரமற்றவை என்றும் அவற்றில் உயிரைப் பறிக்கும் நச்சு பொருட்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் 141 குழந்தைகளின் உயிரிழக்க காரணமான நச்சுப் பொருட்கள், சோதனை செய்யப்பட்ட இருமல் மருந்துகளிலும் இருந்தன என்ற அதிர்ச்சித் தகவலையும் இந்த ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

Tags: Toxic ingredients in cough medicine? - Shocking results in the study!
ShareTweetSendShare
Previous Post

சந்திபுரா வைரஸில் இருந்து தற்காப்பது எப்படி?

Next Post

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறுகிறது!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies