ஓசூரில் விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் மாமியார் மாமனார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் வார்பள்ளி கிராமத்தை சேர்ந்த கலூரி அசானய்யா, ஓசூரில் ஆண்கள் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி பீரம்பீ என்ற மனைவியும், 3 மாத குழந்தையும் உள்ளனர். கடந்த 5ம் தேதி கலூரி அசானய்யா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விடுதியின் மேல் தளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது மகள் பீரம்பீக்கு வேறு திருமணம் செய்துவைக்க கூலிப்படையை ஏவி அசானய்யாவின் மாமனார்- மாமியாரே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாமியார் பீரம்மா, மாமனார் காதர் வல்லி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.