புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார்.
திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராம ராஜ்ஜியம் என்று அவர் கூறியது சர்ச்சையானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் கேள்விகளை எதிர்கொள்ள தயங்கிய அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று கூறி அங்கிருந்து நழுவி காரில் புறப்பட்டு சென்றார்.