மதுரையில் காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் குட்கா விற்ற 420 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையில் கடந்த 8 மாதங்களாக காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இணைந்து 13 ஆயிரம் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பல கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா விற்பனை செய்த 420 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.