திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையான விசாரணை செய்யவில்லை என்றால் பாமக சார்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.