மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு வைத்ததற்கான எந்த தடயமும் கிடைக்காததால் அது புரளி என தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நல்லத்துக்குடியை சேர்ந்த போதை ஆசாமி கணேசனை போலீசார் கைது செய்தனர்.