புதுக்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகிய இருவரும், நாட்டு துப்பாக்கியில் உள்ள விரிசலை சரிசெய்ய வெல்டிங் பட்டறைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு தவறுதலாக நாட்டுத் துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது லட்சுமணன் மீது பால்ராஸ் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.