கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிலர் இரணியல் பகுதியில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தக்கலை மது விலக்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசர் பறிமுதல் செய்தனர்.