அரியலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபுரந்தான் பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்தி ராஜேந்திரன், பன்னீர் செல்வம், சின்னத்தம்பி ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.