வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏரிப்புதூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் சொந்தமாக கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் இரவில் கோழிப்பண்னைக்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு. கோழிகளை விழுங்கி நகர முடியாமல் தவித்துள்ளது.
இதுகுறித்து சுரேஷ் அளித்த தகவலின்பேரில், ஒடுக்கத்தூர் வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா அடர்ந்த காப்புக்காட்டில் விட்டனர்.