மும்பையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மாயமான மாலுமியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க் கப்பலில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில், இளநிலை மாலுமி ஒருவர் மாயமானார். கப்பலில் தீப்பிடித்தபோது அந்த மாலுமி கடலில் குதித்து நீந்தி கரைக்கு வர முயற்சித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது வரை அவரைக் கண்டு பிடிக்க முயலாததால், தேடும் பணியில் கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.