தெலங்கானா ஆளுநர் C.P.ராதாகிருஷ்ணன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்ற அவர், இன்று அதிகாலை நடைபெற்ற தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகளில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசி வழங்கினர்.