பீகார் மாநிலம் பாட்னாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஸ்வான் சமூகத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
பாட்னாவில் அனுமதியின்றி பாஸ்வான் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்திய போதிலும், அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.