ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
நேற்று மாலை 55 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 42 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. எனினும் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 9-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்வதால், நீர்வரத்தில் ஏற்ற இரக்கம் காணப்படுகிறது.