எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229ஆக அதிகரித்துள்ளது.
தெற்கு எத்தியோப்பியாவின் கோபா பகுதியில் கடந்த 21-ம் தேதி பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 229ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் புதையுண்ட உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.