பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் பிரியாணி கடை நடத்தி வரும் கிருஷ்ணன், தனது கடையை விளம்பரம் செய்ய சவுக்கு யூடியூபில் பணியாற்றிய விக்னேஷ்வரன் என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அவர் அந்த பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், கொடுத்த பணத்தை திரும்பகேட்ட கிருஷ்ணனுக்கு, விக்னேஷ்வரன் காெலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில், விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார், பின்னர், சவுக்கு சங்கரையும் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.