கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி சாகர் நீர் தேக்க பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளான லிங்காபுரம், மொக்கை மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவின்பேரில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வந்தனர்.
கேரளாவில் தொடர் கனமழையால், பில்லூர் மற்றும் பவானி சாகர் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் பெருமளவு தேங்கி நிற்பதால் பாதுகாப்பு கருதி வண்டல் மண் தற்காலிகமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர்.