மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஸ்ஸாம் ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலைகளின் ராயல்டி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு காண நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்ததாக தெரிவித்தார்.
மேலும் வேலைவாய்ப்பு, இளைஞர்களின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு மத்திய பட்ஜெட் முக்கியத்துவம் கொடுப்பதாக எக்ஸ் பக்கத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குறிப்பிட்டுள்ளார்.