ஒரே நேரத்தில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் National symposium on unmanned Aeriel vehicles and drones for defence நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குனர் ரீன் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினட் ஜெனரல் பரார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய துணைவேந்தர் வேல்ராஜ்;
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டிரோன் துறையில் ஏராளமான சாதனைகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற அறிஞர்களும் வல்லுனர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். உடன் தமிழ்நாட்டில் உள்ள 30 ட்ரோன் நிறுவனங்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.
டிரோன் துறை வரும் காலங்களில் வெவ்வேறு துறைகளில் பயன்படும். அதற்காக நமது இந்திய அரசும் தர சான்றிதழ் கொடுத்து வருகிறது.
எந்த ஒரு துறையிலும் தரம் இருந்தால்தான் அந்த துறை நீடித்து இருக்கும். டைரக்டர் ஜெனரல் ஆப் குவாலிட்டி அஷுரன்ஸ் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சிம்போசியம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் எக்கசகமான துறைகள் பயன்பெறும்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 52 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என கணக்கிடுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுதான். இதில் முறைகேடுகளும் இருக்கிறது.
ஒவ்வொரு ஆசிரியரின் ஆதார் எண்ணை வைத்து இதனை சரி பார்ப்போம். அந்த வகையில் ஆசிரியர்களின் ஆதார் எண் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில ஆசிரியர்கள் ஆதார் எண்ணை மாற்றி பதிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் வெவ்வேறு ஆதார் எண்ணுடன் இவர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
இதில் 189 ஆசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றியுள்ளனர். இந்த 189 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இது போன்ற ஆசிரியர்கள் பணியமர்த்திய கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த முறைகேட்டில் 189 ஆசிரியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 52 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 2000 ஆசிரியர்கள் குறைபாடு இருக்கிறது. இந்த 2000 ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக 189 ஆசிரியர்கள் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் 32 கல்லூரியில் பணி சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆதார் கார்டு எண்ணை தவறாக பதிவு செய்து முறைகேடில் ஈடுபட்டிருக்கின்றனர். இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி இது போன்ற இது முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.