“ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிடும்படி தமிழக அரசு கடிதம் கொடுத்துள்ளது” என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 682 பாலங்கள் மற்றும் சுரங்கள் கட்டப்பட்டுள்ளது” எனவும், “தமிழக நலனுக்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது” என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.