கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் கடைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நகர் மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள், பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் இது குறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.