மயிலாடுதுறை அருகே மதமாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களை இந்து முன்னணி நிர்வாகிகள் விரட்டியடித்தனர். மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
நீடூர் ஆலங்குடி பகுதியில் கிறிஸ்துவ சபை நடத்தி வரும் பாஸ்டர் ஜான் எபினேசர் என்பவரது வழிகாட்டுதலின் பேரில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டர் தர்மராஜ் என்பவரது தலைமையில், கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மதமாற்ற பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.
மேலும், பல்லவராயன்பேட்டையில் உள்ள நரிக்குறவ சமுதாய மக்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், சம்பவ இடத்திற்குச் சென்று கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களை விரட்டியடித்தனர்.
மேலும், “மதமாற்றம் செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பாேலீசாரிடம் புகார் அளித்தனர்.