நேபாள தலைநகர் காத்மாண்டில் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டில் நடைபெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆராய முன்னாள் விமான போக்குவரத்து ஆணைய இயக்குநர் ரதீஷ் சந்திர லால் சுமன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக நேபாள அரசின் செய்தித் தொடர்பாளர் பிரித்வி சுபா தெரிவித்துள்ளார்.