மதுரை மாவட்டம் நெடுங்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நடுத்தெரு பகுதியை சேர்ந்த பாண்டி- தேன்மொழி தம்பதியினரின் மகன் தினேஷ் பாண்டிபஜார் பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம்போல பேருந்து நிலையத்துக்கு வந்த இவர், பேருந்தை தவற விட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புத்தூர் பாவா என்பவர் மாணவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது நெடுங்குளம் அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் புத்தூர் பாவா உயிரிழந்த நிலையில் மாணவன் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்றுப் வருகிறார்.