தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களை ஆய்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கம்! - நிதின் கட்கரி
Aug 27, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களை ஆய்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கம்! – நிதின் கட்கரி

Web Desk by Web Desk
Jul 25, 2024, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பாகும். நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் இடிந்து விழுந்த சில சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பாலங்கள் இடிந்து விழுந்த விவரங்கள், உயிரிழந்தவர்கள், புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  சலுகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இணைப்பில் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை,  2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக விழுந்தது.  இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான  நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.

தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பை அமைச்சகம் மேற்கொள்கிறது.

பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் பழுதுபார்ப்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள பாலங்களின் ஆய்வு மற்றும் நிலை கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து இடர்பாடுகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் பொருத்தமான பழுதுபார்ப்பு  புனரமைப்பு  ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாலங்களின் கட்டமைப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பிற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி ஏல ஆவணங்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாலங்களின் நிலை மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு  புனரமைப்பு  புனரமைப்பு ஆகியவற்றிற்கான அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கும் செயல்முறைக்காக விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

Tags: Creation of new system to inspect national highway bridges! - Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்!

Next Post

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிதி நெருக்கடி இல்லை! – நிதின் கட்கரி

Related News

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

அர்ஜென்டினாவில் உற்சாகமாக நடைபெற்ற டேங்கோ நடனப் போட்டி!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies