வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய அரசை அணுகுமாறு கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பதவியில் நீடிப்பது ஏன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்சின் 86 வது பிறந்த நாளை முன்ன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 86 மரக்கன்றுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் நடவு செய்து பிறந்த நாளை கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கொண்டாடினர்.
அப்போது மேடையில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
தமிழகத்தில் பீர், பிராந்தி போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க தான் போராடி வருவதாகவும், 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 35 நிமிடங்கள் பாடமெடுத்தாக கூறினார்.
மேலும் 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்பது தனக்கு அவமானமாக இருப்பதாகவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேட்க கூறுகிறார்.
அப்புறம் எதற்கு இவர் முதலமைச்சராக உள்ளார் என கேள்வி எழுப்பினார். இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்த உள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.